உள்ளூர் செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் மாரத்தான் ஓட்டம்

Published On 2023-06-05 14:59 IST   |   Update On 2023-06-05 14:59:00 IST
  • 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ மற்றும் 5 கிலோ மீட்டர் நடைபயணம், மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.

இதில் தொழிலாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், மாணவ மாணவிகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.எம்.சி.டெக். கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார் கொடியசைத்து, மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

.10 கி.மீ. தூரத்தை கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டப்பா (36) என்பவரும், 5 கி.மீ தூரத்தை ஓசூரை சேர்ந்த ஹரிஷ் என்ற மாணவரும் முதலாவது இடத்தில் வந்தனர். இவர்களுக்கு முதல் பரிசு தொகையான தலா 6,000- ரூபாய் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News