உள்ளூர் செய்திகள்

தருமபுரம் ஆதீனத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

Published On 2023-07-19 10:00 GMT   |   Update On 2023-07-19 10:00 GMT
  • இக்கோவிலில், கடந்த மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • சொக்கநாதர்பெருமான் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.இங்கு திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மலைமீது தோணியப்பர், சட்டைநாதர்சுவாமி அருள்பாலிக்கின்றனர்.

பிரசித்திப்பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று புதன்கிழமை தொடங்கி மூன்றுநாட்கள் நடைபெறுகிறது.மண்டலாபிஷேக பூர்த்தி விழா தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து தருமபுரம் ஆதீனம் தருமபுரம் பூஜா மூர்த்தியான சொக்கநாதர் பெருமானுடன் ரதத்தில் சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தடைந்தார்.தொடர்ந்து மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர்பெருமான் எழுந்தருளசெய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுதரிசனம் செய்தனர்.

சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு சொக்கநாதர் பெருமானுடன் வருகை புரிந்த தருமபுரம் ஆதீனத்துக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

Tags:    

Similar News