உள்ளூர் செய்திகள்
வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் சிக்கினார்
- பாப்பிரெட்டிப்பட்டி பகுதி பூதநத்தம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ராமரை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் செந்தில்குமார், வனக்காப்பாளர் முருகன் மற்றும் வனக்குழுவினர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி பூதநத்தம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டா நிலத்தில் மின் இணைப்பு எடுத்து வன உயிரினங்களை வேட்டையாட முயற்சி செய்த மெனசி சேர்ந்த ராமர்(53) என்பவரை பிடித்து மாவட்ட வன அதிகாரி அப்பாலாநாயுடு முன்னர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அவர் ராமரை வனவிலங்குகளை வேட்டையாட முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.