உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே மருமகனை வாளால் வெட்டிய மாமனார் கைது

Published On 2023-11-07 13:41 IST   |   Update On 2023-11-07 13:41:00 IST
  • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாமனார் வாளால் மருமகனை தலையில் வெட்டினார்.
  • போலீசார் வழக்குபதிந்து மாமனாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள பொன்மாந்துரை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சின்னு(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் சரண்யா(30) என்பவருக்கும், தேனியை சேர்ந்த தன்ராஜ் (38) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தன்ராஜ் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சரிவர வேலை இல்லாததாலும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும் சரண்யா தனது குழந்தை களுடன் பொன்மாந்துரை யில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

தன்ராஜ் வேலைக்கு சென்றுவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தை களை பார்க்க வருவது வழக்கம். இருந்தபோதும் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அதேபோல் சரண்யாவை தன்ராஜ் தாக்கியதால் ஆத்திரமடைந்த சின்னு வாளால் தனது மருமகன் தன்ராஜை தலையில் பலமாக வெட்டி னார்.

பலத்த ரத்த காயங்க ளுடன் தன்ராஜ் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், சப்-இன்ஸ்பெ க்டர் அருண்நாராயணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து சின்னுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News