உள்ளூர் செய்திகள்

ஆய்க்குடி பேரூராட்சியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான முகாமை கலெக்டர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

ஆய்க்குடி பேரூராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முகாம்கள்-கலெக்டர் பார்வையிட்டார்

Published On 2023-08-09 14:48 IST   |   Update On 2023-08-09 14:48:00 IST
  • அங்கன்வாடி கட்டிடம்,ரேசன் கடை கட்டிடம் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முகாம்களை நேரில் பார்வை யிட்டார்.

ஆய்க்குடி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2022-23-ன் தார்சாலை அமைத்தல் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23-ன் அங்கன் வாடி கட்டிடம் மற்றும் 13-வது வார்டு பகுதியில் ரேசன் கடை கட்டிடம் கட்டும் பணிகள் , 15-வது நிதிக்குழு திட்டம் 2021-22-–ன் கீழ் மேற்கொ ள்ளப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் மற்றும் போர்வெல் அமைத்தல் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் ஆய்க்குடி தனியார் திருமண மண்ட பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பகுதி –2-ன் கீழ் நடை பெறும் முகாமையும் பார்வை யிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ந.சாந்தி, துணைத் தலைவர் ச.மாரியப்பன் , 4-வது வார்டு உறுப்பினர் புண மாலை, முன்னாள் பேரூ ராட்சி மன்றத்தலைவர் சிவ குமார், இளநிலை பொறி யாளர் கோபி, பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News