உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-06-05 07:18 GMT   |   Update On 2023-06-05 07:18 GMT
  • மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
  • உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை

இந்திய அஞ்சல் துறையில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் மதுரை பி.பி.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் வருகிற
27-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் மனுக்களை 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணி யார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற் றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்த மாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாத வர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும், இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது. கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தபால்களை உதவி இயக்குநர், அஞ்சல்துறை அலுவலகம், தெற்கு மண்டபம், மதுரை-625 002 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். தபால் உறையின் முன்பக்க மேல்பகுதியில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்-ஜூன் 2023 என குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை தெற்கு மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News