உள்ளூர் செய்திகள்

மேயர் இந்திராணி தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை

Published On 2023-07-28 08:45 GMT   |   Update On 2023-07-28 08:45 GMT
  • பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
  • அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார்.

மதுரை

மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில் பேசுகை யில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்க வேண்டும், பொது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

உடனே மேயர் அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பிலும் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியை சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.

அப்போது 26- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சொக்காயி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு சம் பளத்தை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி கல்வெட்டு வைக்க வேண்டும் என்றும், எனது வாக்குக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே மேயர் இது ஜக்கம்மா வாக்கு என பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

Tags:    

Similar News