நவீன எந்திரம் மூலம் சாக்கடை அடைப்பை அகற்றும் பணியை மேயர் இந்திராணி ஆய்வு செய்தார். அருகில் கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன் உள்ளார்.
நவீன எந்திரம் மூலம் சாக்கடை அடைப்பை அகற்றும் பணி
- நவீன எந்திரம் மூலம் சாக்கடை அடைப்பை அகற்றும் பணிைய மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
- இதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகரின் இதய பகுதியாக, மேலமாசி வீதி உள்ளது. தெற்குமாசி-மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள டி.எம்.கோர்ட் அருகில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி வந்தது. இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் மதுரை மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர்.
அதன்படி ஊழியர்களும் சாக்கடையை அடைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொடுத்தனர். ஆனாலும் அந்த பகுதியில் சாக்கடை அடைப்பு தொடர்கதையாக நீடித்து வந்தது. இதற்கிடையே மதுரை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் பாதாள சாக்கடை அடைப்பை உறிஞ்சி அகற்றும் வகையில், அதிநவீன எந்திரத்துடன் கூடிய வாகனங்களை கொள்முதல் செய்து உள்ளது.
நவீன எந்திரம் மூலம் இன்று காலை டி.எம்.கோர்ட்டு சாக்கடை அடைப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் வாயிலாக அங்கு தொடர்கதையாக நீடித்து வந்த சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த பணியை மாநகராட்சி மேயர் இந்திராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.