உள்ளூர் செய்திகள்
பழைய பென்சன் திட்டம் குறித்து கருத்தரங்கு
- பழைய பென்சன் திட்டம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
- அரசு ஊழியர்களின் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க கருத்தரங்கு நடந்தது.
மதுரை
மதுரை உலக தமிழ் சங்க அரங்கில் தமிழக அரசு ஊழியர்களின் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க கருத்தரங்கு நடந்தது. இதில் புதிய பென்சன் திட்டத்தை ஒழிப்பது, பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலைவர்கள் பேசினர்.
தமிழக அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், சி.பி.எஸ். ஒழிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேசுவரன், மாவட்ட தலைவர் சரவணன், கல்யாணி, மணிகண்டன், மாரியப்பன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிப் (தேனி), முனியாண்டி (விருதுநகர்), செல்வகுமார் (சிவகங்கை), அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில செயலாளர் பரஞ்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.