உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2022-09-27 08:16 GMT
  • ஓட்டலில் பதுக்கிய 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • இந்த சம்பவம் தொடர்பாக தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலைப் பொருட்கள் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஓட்டல் நடத்தி வரும் கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 51), அவரது மகன் பாலசுப்பிரமணி (22) ஆகிய 2 பேரை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News