ஓட்டல்களில் தரமற்ற பொருட்கள் பறிமுதல்
- மதுரை மாவட்டம் சோழவந்தானில் திடீர் சோதனை நடந்தது.
- ஓட்டல்களில் தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், இறைச்சி விற்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட் வீதி, கடை வீதி, காய்கறி சந்தை பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலிதீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேேபால் இைறச்சி கடைகளில் நடந்த சோதனையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த கெட்டுப்போன கோழிக்கறி, ஆட்டுக்கறியை கைப்பற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட தரமற்ற உணவு மற்றும் பாலிதீன் பைகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது மேஸ்திரி வினோத்குமார், சுந்தரராஜன், பணியாளர்கள் பூவலிங்கம், பாண்டி, முருகன் உடன் இருந்தனர்.