உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.

ஒரே நாளில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-08-08 08:35 GMT   |   Update On 2022-08-08 08:35 GMT
  • திருமங்கலம் அருகே அடுத்தடுத்து நடத்திய சோதனையில் ஒரே நாளில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  • வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் உள்ள விடத்தகுளம் சாலையில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் வட்டாட்சியர் சிவராமன் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டு ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகிறார்.

கீழக்கோட்டையில் உள்ள தனியார் அரிசி ஆலையில் நேற்று 3டன் ரேசன் அரிசி பிடிபட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரவு விடத்தகுளம் சாலையில் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான குழுவினர் சரக்கு வேனை சோதனையிட்டனர்.

வட்டாட்சியர் சோதனையிடுவதை அறிந்த சரக்கு வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சந்தேகம் அடைந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடன் வந்த வருவாய் துறை அலுவலர்கள் சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

50 கிலோ எடை உள்ள 80 மூடைகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 4 டன் ஆகும். வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த வாகனம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஒரே நாளில் அடுத்தடுத்து வட்டாட்சியரின் நடவடிக்கையால் திருமங்கலம் பகுதியில் 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News