உள்ளூர் செய்திகள்

மேலூர் நகர்மன்ற கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது.

மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி தீர்மானம்

Published On 2022-09-30 12:32 IST   |   Update On 2022-09-30 12:32:00 IST
  • மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
  • நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலூர்

மேலூர் நகராட்சி கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலம்பட்டி ஊரணியில் நடைபெற்று வரும் பூங்கா பணிக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2-வது வார்டு அ.ம.மு.க. உறுப்பினர் ஆனந்த் மேலூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் வயர்லையன் பதிப்பதற்காக பள்ளங்களை தோண்டுவதால் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது என்று தெரிவித்து, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் நடமாடும் வண்டியினை வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார்.

மதுரை எம்.பி. வெங்கடேசன் முயற்சியால் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த வாழ்வாதார முகாமை தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க வைத்து பயன்பெற செய்யுமாறு நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கவுன்சிலர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார ஆய்வாளர் சரவணன், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணகுமார், மேலாளர் தியாகராஜன், இளநிலை அலுவலர் ஜோதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News