உள்ளூர் செய்திகள்

கதர் ஆடை புரட்சி தினம்

Published On 2023-09-23 08:50 GMT   |   Update On 2023-09-23 08:50 GMT
  • அன்னை தெரசா மகளிர் பல்கலையில் கதர் ஆடை புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • குறும்படம் திரையிடப்பட்டது.

மதுரை

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில் காந்திஜியின் எளிய கதர் ஆடை அணிதல் புரட்சி தினம் எளிய வாழ்க்கை முறை-உரிய வாழ்க்கை என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்பட்டது.

ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். மதுரை மைய இயக்குநர் புஷ்பராணி தலைமையேற்று "எளிய வாழ்க்கை முறை-உன்னதமான வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் பேசினார்.

தொடர்ந்து மாணவிகள் சொற்பொழிவு, பாட்டு, நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. "எளிமை, உண்மை, நல்லிணக்கம் மற்றும் மாற்றத்திற்கான காந்திஜியின் பாதை" என்ற கருப்பொருளில் மாணவிகளுக்கு குறும்படத்தை திரையிடப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினார். 

Tags:    

Similar News