உள்ளூர் செய்திகள்

பரிதிமாற்கலைஞர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

Published On 2023-07-07 13:22 IST   |   Update On 2023-07-07 13:22:00 IST
  • பரிதிமாற்கலைஞர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
  • நாம் தமிழர் கட்சி சார்பில் மருதமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

திருப்பரங்குன்றம்

தமிழறிஞர் பரிதிமாற்கலைஞரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு விளாச்சேரியில் அவரது இல்லத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மண்டல தலைவர் சுவிதா விமல், பி.டி.ஒ.க்கள் கீதா, ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணை தலைவர் குரும்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, இந்திராகாந்தி ஆகியோர் பரிதிமாற்கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அ.தி.மு.க. சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் சேர்மன் தர்மராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் ,மருதுபாண்டியர் பேரவை கண்ணன்,ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்ற நிர்வாகி அய்யல்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் மருதமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

Tags:    

Similar News