முகாமில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோரிடம் கவுன்சிலர்கள் உசிலை சிவா, இந்திராகாந்தி ஆகியோர் குறைகளை தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- 95-வது வார்டு சவுபாக்கியா நகர், முல்லை நகர், அமைதிச்சோலை பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
கவுன்சிலர் உசிலை சிவா, 99-வது வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதி களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதேபோன்று கவுன்சிலர் சிவ சக்தி ரமேஷ், திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை சேதம டைந்துள்ளதாகவும் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த பகுதியை சீரமைத்து விரைவில் நடைபெற உள்ள பங்குனி திருவிழாவிற்கு தேரோட்டம் நடைபெற ஏதுவாக பணிகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர், கமிஷனர் உத்தரவிட்டனர்.
94-வது வார்டு திருநகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். குப்பைகள் சரிவர அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது என்று கவுன்சிலர் சுவேதா சத்யன் புகார் செய்தார்.அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சரிவர பணியாற்றுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்தார்.
கவுன்சிலர் இந்திரா காந்தி 95-வது வார்டு சவுபாக்கியா நகர், முல்லை நகர், அமைதிச்சோலை பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை சீர மைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த முகாமில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் முகமது கமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.