உள்ளூர் செய்திகள்
திருவாதவூரில் மாணிக்கவாசகர் குருபூஜை
- திருவாதவூரில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
- மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் பிறந்த மக நட்சத்திர நாளில் அங்கு குரு பூஜை விழா நடந்தது.
இதையொட்டி ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவிலில் மதுரை நகரத்தார் மற்றும் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாணிக்கவாசகர் தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி மேளதாளங்களுடன் நடந்தது. அங்கு அவருக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.