மதுரை - திருமங்கலம் இரட்டை பாதை பணி: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 13-ந் தேதி ஆய்வு
- மதுரை - திருமங்கலம் இரட்டை பாதை பணி: ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 13-ந் தேதி ஆய்வு செய்கிறார.
- அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை
மதுரை - திருமங்கலம் இடையே 17.32 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெங்களூரு தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நாளை மறுநாள் (13-ந் தேதி) ஆய்வு செய்கிறார். அப்போது மதுரை-திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடக்கிறது. அதன்பிறகு மாலை 3 மணி முதல் 6 மணி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை-திருமங்கலம் இரட்டை பாதையில், மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா 14-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அந்த பகுதியில் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை- திருமங்கலம் இடையேயான புதிய இரட்டை ரெயில் பாதை மின்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரட்டை ரெயில் பாதையை நெருங்கவோ, கடக்கவே வேண்டாம் என்று மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.