உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்-தளபதி எம்.எல்.ஏ.

Published On 2023-05-17 14:17 IST   |   Update On 2023-05-17 14:17:00 IST
  • கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.
  • வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

மதுரை

மதுரை பசுமலையில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு செயலர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வருகிற ஜூன் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

மேலும் கட்சிக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள முன்வரும் நிலையில் வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News