ஆட்டோவில் சென்ற ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
- ஆட்டோவில் சென்ற ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா பாத்திமா (வயது24). இவர் மதுரை இலந்தைகுளத்தில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவில் சீருடை அணியாமல் மேலும் 2 பேர் பயணம் செய்தனர்.
சிறிதுதூரம் சென்றதும் அவர்கள், ரபீனாபாத்திமா விடம் இருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, அவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரபீனாபாத்திமா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (43) சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வீட்டில் வைத்திருந்த 5¾பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து கவிதா கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். மேலூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்திருந் தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கவிதாவின் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.