உள்ளூர் செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் புதிய சேமிப்பு கணக்கை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். அருகில் இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர்கள் வி.விமல், சுரேஷ் உள்பட பலர் உள்ளனர்.

செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழா

Published On 2022-11-26 12:41 IST   |   Update On 2022-11-26 12:41:00 IST
  • 1000 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழாவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
  • பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

திருப்பரங்குன்றம்

மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தை களுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெண்களுக்கு சம உரிமை, சொத்தில் சம உரிமை ஆகிய முக்கியத்துவத்தை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல அஞ்சல்துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின எதிர்கால நலன் கருதி கொண்டு வரப்பட்டது.

தற்போது முதல்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதி யில் 1000 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு ெதாடங்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த தொகையை குழந்தைகளுக்கு சேமியுங்கள். அது அவர்களின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். முடியாதவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி ேபசினர். இதில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமார், மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜசேகர், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

Similar News