உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையம்

மதுரை ரெயில் நிலையத்தில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரம்

Published On 2022-06-12 08:00 GMT   |   Update On 2022-06-12 08:00 GMT
  • மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரம் வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை

மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கும்படி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகள் அவதிப்பட்டதை தவிர்க்க தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக அந்த எந்திரங்கள் முழுமையாக செயல்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.

இதனால் ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிரதான நுழைவுவாயிலில் 8 கவுண்டராக இருந்து வந்தது. இதில் 3 கவுண்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. மேலும், மேற்கு நுழைவுவாயில் முன்பதிவு பயணச்சீட்டும், முன்பதிவில்லாத பயணசீட்டும் ஒரே டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படுகிறது.

இதனால் தாமதமும் பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, மேற்கு நுழைவுவாயிலில் கூடுதலாக தானியங்கி டிக்கெட் வழங்கும எந்திரம் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ரெயில் நிலைய பிரதான நுழைவுவாயிலில் கூடுதலாக 2 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் வைக்க வேண்டும்.

இதே போன்று பரமக்குடி ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்கவும், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News