உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசினார்.

தி.மு.க.செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-05 08:15 GMT   |   Update On 2022-09-05 08:15 GMT
  • மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

திருமங்கலம்

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், சாமிநாதன், லதா அதியமான், நகரச் செயலாளர் ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் மதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசபிரபு, நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், இளைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை அனுப்புவது குறித்தும், நிர்வாகிகளிடம் ஆலோ சனை நடத்தினார்.

விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கப்பலூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

தி.மு.க.விற்கு கொள்கை உண்டு. பா.ஜ.க.வுக்கு எந்த கொள்கையும் கிடையாது. நமது கட்சியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துக் கூறினாலே போதும், தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் இளைஞர்கள் வீதம் 3 தொகுதிக்கு 30 ஆயிரம் உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதேபோல மகளிர் அணிகளும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எந்த வேலையும் கிடையாது. அதனால் தான் அவர் தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் கூறுவதற்கு எல்லாம் பதில் கூற தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News