தி.மு.க. சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்கிறார்-மாவட்ட செயலாளர் மணிமாறன்
- தி.மு.க. சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.
- வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகி கள், மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்
இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தெரிவித்துள்ளார்.