உள்ளூர் செய்திகள்

தி.மு.க. மகளிரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேயர் இந்திராணி பேசுவதையும், அதில் பங்கேற்ற திரளான பெண்களையும் படத்தில் காணலாம். 

மதுரையில் தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-24 09:18 GMT   |   Update On 2023-07-24 09:18 GMT
  • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரையில் தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

மதுரை

மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி மதுரையில் தி.மு.க. மாவட்ட மகளிரணி சார்பில் பழங்காநத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகி உமா சிங்கதேவன், ரேணுகா ஈஸ்வரி, கீர்த்திகா தங்கபாண்டியன், சின்னம்மாள், செவனம்மாள், சாந்தி, ராமலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், வடக்கு மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் கண்டன உரையாற்றினார்.

இதில் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேல், வேலுச்சாமி, மாநில தீர்மான குழு உறுப்பினர் அக்ரி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான், ஒச்சு பாலு, பாலசுப்பிரமணியன், அழகு பாண்டி,இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா,வைகை பரமன்,சுதன்,காளிதாஸ், கிருஷ்ண பாண்டி, தைக்கா தெரு ராஜேந்திரன்,வைகை மருது, நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், ஜெயராம், ராமபிரசாத், ஒச்சுபாலு, சுதன், சிவா, ராஜரத்தினம், மகேந்திரன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News