உள்ளூர் செய்திகள்

தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை

Published On 2022-10-16 13:46 IST   |   Update On 2022-10-16 13:46:00 IST
  • தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை விடுத்தனர்.
  • 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் தேவர் தேசபக்த முன்னணி நிர்வாகிகளான முருகன், ஞானசேகரன், கவிக்குமார் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க கடந்த 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது. அப்போது அன்றைய அரசு தங்கக் கவசத்தை கலெக்டர் வசம் ஒப்படைத்தது. இப்போது அ.தி.மு.க. மீண்டும் 2 அணிகளாக பிரிந்துள்ளது.

2017-ம் ஆண்டு எடுத்த முடிவின்படி கலெக்டரே தங்ககவசத்தை பெற்று, தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News