உள்ளூர் செய்திகள்

அழகர்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தேங்காய் நாரால் ஆன விரிப்பு போடப்பட்டுள்ளது.

அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நார் கம்பளம்

Published On 2023-04-18 09:04 GMT   |   Update On 2023-04-18 09:04 GMT
  • அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
  • வெயில் கொடுமையில் இருந்து பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து, வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

மதுரையில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இரவு நேரம் ஆன பிறகும் வீட்டுக்குள் வெக்கை அடிக்கிறது. நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா சில நாட்களில் தொடங்க உள்ளது. பக்தர்கள் அனல் வெயிலை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நாருடன் கூடிய கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதங்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் பஸ் நிலையம், வாகனம் நிறுத்துமிடம், கிழக்கு நுழைவாயில் உள்ளிட்ட அனைத்து வளாக பகுதி களிலும் இந்த தேங்காய் நார் விரிப்பு போட்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நடந்து சென்று வருகிறார்கள்.

Tags:    

Similar News