உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி பந்தயத்தை தலைவர் முகமது யாசின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-11-26 06:18 GMT   |   Update On 2023-11-26 06:18 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
  • முகமது யாசின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப் பட்டியில் அமைச்சர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மேலூர் நகர் தி.மு.க. 25-வது வட்டக் கழகத்தின் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் திருவாதவூர் ரோட்டில் இன்று காலை நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய 2 பிரிவுகளாக நடைபெற்றது.

இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 26 மாடுகளும் என மொத்தம் 36 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றது. இந்த மாட்டு வண்டி போட்டியினை மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மேலூர் தெற்குப்பட்டி மதன் வண்டி முதல்பரிசும், ராமநாதபுரம் கடுகுசந்தை தவம் 2-ம் பரிசும், மதுரை மாவட்டம் சத்திரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் 3-ம் பரிசும், சிவகங்கை மாவட் டம், காளக்கண்மாய் வீர பாலா, சாந்தமடை சுந்தரம் ஆகியோரது மாட்டு வண்டி 4-ம் பரிசும் பெற்றனர்.

சிறிய மாட்டுவண்டியில் 26 ஜோடிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்றில் 13 ஜோடி மாட்டு வண்டியில் முதல் பரிசு சத்திரப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் வண்டியும், 2-ம் பரிசு மதுரை மாவட்டம் பாண்டி கோவில் பாண்டிச்சாமி மாட்டு வண்டியும், 3-ம் பரிசு மதுரை மாவட்டம் மேலூர் சித்திக் மற்றும் சோனைமுத்து சேர்வை மாட்டு வண்டியும், 4-ம் பரிசு தேனி மாவட்டம், தேவராம் முத்துபெருமாள் வெற்றி பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் அழகு பாண்டி, வட்ட செயலாளர் குமார், துணை வட்டச் செயலாளர் மணிமாறன், நகர் மன்ற உறுப்பினர் மனோகரன், அவைத் தலைவர் மகேந்திரன், தி.மு.க. இளைஞரணி வசந்த ராஜன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். தலைவர் முகமது யாசின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News