இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பாலாலய பூஜைகள்
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பாலாலய பூஜைகள் நடந்தது.
- நாளை காலை தொடங்குகிறது.
மதுரை
மதுரை மாநகரின் மையப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம் எதிரில் தெற்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள் ளது பிரசித்தி பெற்ற இம் மையிலும் நன்மை தருவார் கோவில். கிழக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ள லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும், பார்வதியும் லிங் கத்திற்கு பூஜைகள் செய்யு மாறு மேற்கு நோக்கி காட்சி தருகிறார்கள்.
பூலோக கைலாயம் என்று போற்றப்படும் இந்த கோவிலை சிவகங்கை சமஸ் தான தேவஸ்தானம் நிர்வ கித்து வருகிறது. இங்கு மூல வராக சொக்கநாதரும், அம்பாள் மத்தியபுரி நாயகியும், உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தரும் இருந்து அருள்பாலித்து வருகின்ற னர்.
இந்த கோவிலில் பல் வேறு உற்சவங்கள், வைபவங்கள், பிரதோஷ விழா, ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இதற்கிடையே கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின.
அதன் தொடர்ச்சியாக பாலஸ்தான கும்பாபிஷேகம் எனப்படும் பாலாலய பூஜை கள் நாளை (23-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கு கிறது. அன்றைய தினம் காலை 10.32 மணி முதல் 11 மணிக்குள் மகர லக்னத்தில் பாஸ்தாபன கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
முன்னதாக நாளை (22-ந்தேதி, புதன்கிழமை) காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அனுக்ஞை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ் யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், விமானங்கள் கலாகர்ஷ–ணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
23-ந்தேதி காைல 7.35 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாவாசனம், இரண்டாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, 10 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபா ராதனை, கடங்கள் புறப்பா டும், 10.32 முதல் 11 மணி வரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் விமானங்கள் பாலஸ்தாபன மஹா கும்ாபிஷேகம், மகா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயா முதல்வர் எஸ்.கே.ராஜா பட்டர், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் ஸ்தானிகம் சி.ஹாலாஸ்ய நாத பட்டர், ஸ்தல அர்ச்சகர் எஸ்.தர்மராஜ் சிவம், கண் ணாணிப்பாளர் எஸ்.கணபதி ராமன், கவுரவ கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.சாம்பசிவன், மேலாளர் பா.இளங்கோ மற்றும் குழு வினர் சிறப்பாக ெசய்து வருகிறார்கள்.