உள்ளூர் செய்திகள்

அரசு விடுதி: ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-14 10:28 GMT   |   Update On 2022-07-14 10:28 GMT
  • அரசு விடுதிகளில் தங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
  • விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (https://tnadw-hms.in/application) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உள்ள காலியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்களின் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (https://tnadw-hms.in/application) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி விடுதிகளுக்கான சேர்க்கை வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கான சேர்க்கை வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் என விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் விடுதி சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தகுதியான மாணவர்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அனீஷ்சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News