உள்ளூர் செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் உடல்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இறந்து 2 நாட்களாக கிடந்த வாலிபர்

Published On 2023-09-08 12:49 IST   |   Update On 2023-09-08 12:49:00 IST
  • மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இறந்து 2 நாட்களாக வாலிபர் கிடந்தார்.
  • அலங்காநல்லூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங் காநல்லூரை அடுத்த பூதகுடி ஊராட்சி, விஷ்வா நகர், 2-வது தெரு குடியிருப்பு பகுதியின் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையா ளம் தெரியாத வாலிபர் பிணம் ஒன்று கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடி யாக அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இறந்து கிடந்த வரின் உடல் கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்ததால் முகம், கை, கால்கள் வீங்கி அடையாளம் தெரியாத வகையில் காணப் பட்டது.

ஆள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் யாரோ வாலி பர் ஒருவர் மதுபோதை மயக்கத்தில் கிடப்பதாக நினைத்து கண்டுகொள்ளா மல் சென்று விட்டனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் உடல் கிடந்ததால் ளிட்ட பல்வேறு கோணங்க ளில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News