உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

Update: 2022-07-03 11:25 GMT
  • வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார்.

மதுரை

மதுரை சோலை அழகுபுரம், திருப்பதி நகரச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (வயது 39). இவர் நேற்று கருப்பாயூரணி, பாரதிபுரம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக செண்பகமூர்த்தி, மாட்டுத்தாவணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாயூரணி சீமான் நகர், நூல் பட்டறை தெரு ஜான் பிரிட்டோ, கே.புதூர் சங்கர் நகர் சதாம் உசேன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மதுரை அழகப்பன் நகர், காந்திஜி தெருவை சேர்ந்தவர் முருகன் (51). இவர் நேற்று ஜெய்ஹிந்த்புரம் எல்.எல். ரோடு சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் என்ற பிரதர்ஸ் சதீஷ், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார். இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெய்ஹிந்த்புறம் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News