உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2023-09-29 15:05 IST   |   Update On 2023-09-29 15:05:00 IST
  • மதுரையில் மத்திய அரசு அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் கொள்ளை போனது.
  • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை அவனி யாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி பேராசிரியர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகன் பிரின்ஸ் ரிச்சர்ட்சன் (வயது34). இவர் பெங்களூரில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலு வலராக பணியாற்றி வருகிறார்.

பெருங்குடியில் உள்ள வீட்டில் இருந்த அவரது தாயார் சில நாட்களுக்கு மன்பு வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் 25 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் ஊர் திரும்பிய பிரின்ஸ் ரிச்சர்ட்சன் தாயார் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News