உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் 2 செல்போன்கள் அபேஸ்

Update: 2022-06-25 08:41 GMT
  • 2 செல்போன்களை அபேஸ் செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
  • சம்பவத்தன்று மதியம் இவர் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலுக்கு வந்தார்.

மதுரை

திருமங்கலத்தை அடுத்த புலியூர், கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டி மகன் ராகேஷ் (வயது 19). இவர் படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று மதியம் இவர் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலுக்கு வந்தார். அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம், ரெயில்வே ஆபீஸில் வேலை கிடைக்குமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் அங்கு தான் வேலை பார்க்கிறேன். ரெயில்வே அலுவலகத்தில் வேலை வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். உன்னிடம் பணம் உள்ளதா?' என்று கேட்டுள்ளார். அதற்கு ராகேஷ் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அந்த நபர் 'நீ வைத்திருக்கும் 2 செல்போன்களை கொடு. இதனை அதிகாரி பெற்றுக்கொண்டு உனக்கு வேலை கொடுப்பார். அதன்பிறகு பணத்தை கட்டிவிட்டு செல்போனை திருப்பிக் கொள்" என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராகேஷ் தன்னிடம் இருந்த 2 செல்போன்களை கொடுத்துள்ளார்.

இதனை பெற்று க்கொண்டு அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். செல்போனை வாங்கி சென்ற வாலிபர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களுடன் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News