உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2022-06-26 14:57 IST   |   Update On 2022-06-26 14:57:00 IST
  • குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை

சம்மட்டிபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த அன்புசெல்வம் மகன் மணிகண்டன் (வயது 19). சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் நகர், பர்மா காலனி ஆறுமுகம் மகன் சேதுபதி (வயது 22). மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி சேதுபதி, மணிகண்டன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News