உள்ளூர் செய்திகள்

கொடைரோடு ரெயில்நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் ஆய்வு செய்தார்.

கொடைரோடு ரெயில்நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

Published On 2022-12-17 12:22 IST   |   Update On 2022-12-17 12:22:00 IST
  • கொடைரோடு ரெயில்நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • போலீஸ் நிலையம் கட்டிடம் ஆகியவை பாரமரிப்பு இல்லாமல் இருந்தது. அதனை அவர் புகைப்படம் எடுத்து க்கொண்டார்.

கொடைரோடு:

கொடைரோடு ரெயில்நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பதிவேடுகள், பிளாட்பாரம், கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பழுது, மேல்பகுதியில் மரம் செடி கொடிகள் வளர்ந்திருப்பதையும் பார்வையிட்டார்.

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிட மாடியில் படுக்கை வசதி கொண்ட ஓய்வு அறை, ரெயில்வே போலீஸ் நிலையம் கட்டிடம் ஆகியவை பாரமரிப்பு இல்லாமல் இருந்தது. அதனை அவர் புகைப்படம் எடுத்து க்கொண்டார். மேலும் கார் டிரைவர்கள் அவரிடம் மனு அளித்தனர்.

அதில் கொரோனா காலக்கட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கொடைரோடு ரெயில்நிலையத்தில் நிற்காமல் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அந்த நடைமுறை தற்போது தொடர்கிறது. எனவே ரெயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டி ருந்தனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆனந்த் தெரிவித்தார்.

ஆய்வின் போது கொடை ரோடு ரெயில்நிலைய அதிகாரி அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News