உள்ளூர் செய்திகள்

போலீசாரை கண்டதும் லாட்டரி வியாபாரிகள் ஓட்டம்

Published On 2022-12-30 15:18 IST   |   Update On 2022-12-30 15:18:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.
  • ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த 2 ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம், தப்பி ஓடிய அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 52), மல்லேஷ் (60) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இதே போல ராயக்கோட்டை பகுதியில் போலீசாரைக்கண்டதும் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்த அம்மா பூங்கா பகுதியை சேர்ந்த முத்து (45), கெலமங்கலம் பகுதியில் போலீசாரை கண்டதும் லாட்டரி சீட்டுகளை வீசிவிட்டு ஓட்டம் பிடித்த ஆஞ்சநேயர்கோவில் பகுதியை சேர்ந்த விஜி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News