உள்ளூர் செய்திகள்

கோடை காலம் தொடங்காமலேயே எகிறிய எலுமிச்சை பழம் விலை

Published On 2023-10-31 15:28 IST   |   Update On 2023-10-31 15:28:00 IST
  • கிலோ ரூ.126-க்கு விற்பனை .
  • வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

 தருமபுரி, 

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைக் குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை பழம் திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் இந்தியாதான். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தருமபுரி மாவட்டத் திற்கு எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. கனிகளில் ராஜ கனியாக இருந்து வரும் எலுமிச்சை மருத்துவகுணம் நிறைந்து காணப்படுவதாக மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிக்கப் பொது மக்கள் எலுமிச்சை பழச் சாற்றை அதிகமாகப் பருகி வருகின்றனர். கடவுள் வழிபாடு, சைவ, அசைவ உணவகங்களில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. இல்லத்தரசிகளின் வீடுகளிலும் எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான டீ பிரியர்கள் பால் கலந்து டீ அருந்துவதை தவிர்த்து விட்டு எலுமிச்சை சாறு கலந்த டீ அருந்துவதால் பிரபலமாக (லெமன் டீ) விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து உள்ளது. மழை மற்றும் பணியின் காரணமாக விளைச்சல் குறைந்து உள்ளதால் வரத்து குறைந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களிடத்தில் எலுமிச்சை பழத்தின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் பல மாதங்களாக விலை உயர்ந்துள்ளது. முதல் தரமான பழம் ஒரு கிலோ ரூ.200-க்கும் 2-ம் தரம் ரூ.150-க்கும், 3-ம் தரம் ரூ.126-க்கும் விற்பனையாகிறது. 2 மற்றும் 3-வது தரமான பழங்கள் மட்டும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதல் தரமான பழங்கள் வெளிச் சந்தைகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. மூன்றாம் தரமான ஒரு எலுமிச்சைபழம் 5 ரூபாயும், இரண்டாம் தரமான ஒரு எலுமிச்சைபழம் 7 ரூபாயும், முதல் தரமான ஒரு எலுமிச்சை 10 ரூபாய் என விற்பனை செய்யப்படு கிறது. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ள தாக வியாபாரிகள் தெரிவிக்கின்ற னர்.

Similar News