உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்தபடம்.

தாழையூத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-01-08 08:22 GMT   |   Update On 2023-01-08 08:22 GMT
  • நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தாழையூத்தில் நடை பெற்றது.
  • கிராம உதயம் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் தாழையூத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்த தலைமையுரை ஆற்றி னார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன் மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுனை முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் நன்றி கூறினார். கிராம உதயம் உறுப்பினர்கள் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களிடம் வழங்கினார்கள்.

Tags:    

Similar News