உள்ளூர் செய்திகள்

15 வார்டுகளில் எல்இடி பல்புகள்- ஆரணி பேரூராட்சி மன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-01-19 22:41 IST   |   Update On 2023-01-19 22:41:00 IST
  • பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
  • தமிழக அரசின் சமுதாய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ச.கலாதரன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், தமிழக அரசின் சமுதாய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27.15 லட்சம் மதிப்பில் 537 எல்.இ.டி. பல்புகள் 15 வார்டுகளில் பொருத்துவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் டி.கண்ணதாசன், ப.சோ.முனுசாமி, க.கா.சதிஷ், சந்தானலட்சுமி குணபூபதி, சுபாஷிணி ரவி, பிரபாவதி ஷேஷாத்திரி, கவுசல்யா தினேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில், இளநிலை உதவியாளர் யுவராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News