உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 19:29 IST   |   Update On 2023-07-21 19:29:00 IST
  • கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய-மாநில பாஜக அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
  • சார்பு நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே நடந்த கலவரத்தில், இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய-மாநில பாஜக அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெறுகின்றன.

அவ்வகையில், பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் பொன்னேரி அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சார்பு நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Similar News