உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே விபத்தில் பெண் பலி

Published On 2022-10-05 09:52 IST   |   Update On 2022-10-05 09:52:00 IST
  • பைக் பெண் மீது மோதியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
  • பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த மூக்கையா மனைவி சரசு (வயது66). இவர் சம்பவத்தன்று தனது மகள் வனிதாவுடன் மோட்டார் சைக்கிளில் சாமியார்மடம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (33) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சரசு கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News