சுற்றுலா வேன் மோதி கூலி தொழிலாளி காயம்
- சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
- அவருக்கு மூக்கு, வாய், இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58) கூலி தொழிலாளி.
இவர் கடந்த 20-ம் தேதி மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது மார ண்ட அள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அதில் அவருக்கு மூக்கு, வாய், இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து மாரண்ட அள்ளி போலீசில் புகார் அளிக்கப்படடது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.