மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி
- வலையப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்தார்.
- மோட்டாரின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரண மாக ராஜூ மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துபோனார்.
பரமத்தி வேலூர்:
ஆந்திரா மாநிலம் குறுகொண்டாவாரி பேட்டா அருகே போத்தாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 55 ). இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வலையப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தேங்காய் குடோனில் வேலை முடித்துவிட்டு, குளிப்பதற்காக மின் மோட்டாரை போட்டபோது தண்ணீர் வரவில்லை.
இதையடுத்து அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து தட்ட முயன்றபோது, மோட்டாரின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரண மாக ராஜூ மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துபோனார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.