உள்ளூர் செய்திகள்

திருஇருதய பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக வந்தனர்.

தஞ்சை திருஇருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி

Published On 2023-04-02 08:22 GMT   |   Update On 2023-04-02 08:22 GMT
  • குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சை திரு இருதய பேரா லயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி இன்று தஞ்சை மறைமாவட்ட பரிபாலகரும் ஆயர் (பொ) சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் குருத்தோலைகளை ஏந்தியப்படி பவனியாக சென்றனர்.இதேபோல் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புனித சேவியர் தொழிற்பயிற்சி பள்ளியின் தாளாளர் சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து மறைமாவட்ட பரிபாலகர்சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேராலய பங்குத்தந்தை பிரபகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலர் ஆன்ட்ரு செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சண்ட் தலைமையில் செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபையினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News