உள்ளூர் செய்திகள்
நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
- முதல்கால ஹோம பூஜைகள், தீபாரா தனை ஆகியவை நடந்தன.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், சென்னை சாலை உள்ள வெள்ளக்குட்டையில் அமைந்துள்ள நாகம்மன் கோவில் மஹா கும்பா பிஷேகம் நடந்தது. இதை யொட்டி கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி, முதல்கால ஹோம பூஜைகள், தீபாரா தனை ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அம்மனுக்கு 48 பால் குடங்களை ஊர்வ லமாக கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
10 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், நாகத்தம்மன் மூலமந்திர ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன. 11 மணிக்கு கலசங்கள் புறப்ப டுதல் மற்றும் அம்மனுக்கு மஹா அபிஷேகம், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல் ஆகிய வை நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏரளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.