உள்ளூர் செய்திகள்

பச்சைவீட்டுக்கொட்டாயில் பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-07-13 12:53 IST   |   Update On 2023-07-13 12:53:00 IST
  • கும்பிஷேக விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பச்சைவீட்டு கொட்டாயில் பட்டாளம்மன், முத்தாலம்மன், கரிவேட்ட ராயசாமி கோவில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கோவில் கும்பிஷேக விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பட்டாளம்மன், முத்தாலம்மன், கரிவேட்டராயசாமி கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் வெகுவிமர்சையாக நடத்தி வைத்தனர்.

பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பச்சைவீட்டுக்கொட்டாயில், தண்டுகாரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News