உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவி அபிநயாவை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பாராட்டினார்.

திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

Published On 2022-12-06 09:02 GMT   |   Update On 2022-12-06 09:02 GMT
  • தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
  • மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.

இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.

சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .

இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News