உள்ளூர் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-06-14 14:23 IST   |   Update On 2023-06-14 14:23:00 IST
  • மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
  • சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி செயலாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கீர்த்தனா, சக்தி பார்கவி, சுமித்ரா, மாணவர் கார்த்திகேயன் ஆகிய 4 பேர் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இப்பள்ளியில் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் திறமை தேடல் தேர்வில் ஹரணி தங்கம், ரவீணா ஆகிய 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் கலைஞர் என்ற மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு, பள்ளியின் கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோ ர்கள், பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News