உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்றம் தொடக்கம்

Published On 2022-09-17 14:55 IST   |   Update On 2022-09-17 14:55:00 IST
  • அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்றம் துவங்கப்பட்டது.
  • மாணவர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், பணி யாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்றம் துவங்கப்பட்டது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர்.சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் 'மனம்' என்றழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் துவக்கப்பட்டது. தேசிய குற்றவியல் ஆவணப்படி ஆண்டுதோறும், 8.2 சதவீத மாணவர்கள் தற்கொலையால் இறக்கின்றனர். இதில், கடந்த 2020-ல், 7.4 சதவீத (930 பேர்) மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மாணவர்களின் பதற்றத்தை போக்கி, எதிர்கால சவால்களை கையாளும் விதத்தில் மனநல நல்லாதரவு மன்றம் துவக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் சங்கீதா தலைவராகவும், துணை முதல்வர் சாத்விகா துணை தலைவராகவும், இணை போராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் துர்கேஷ், சேனாதித்தா, ஸ்டேன்லிபால், ரேஷ்மா, ஷாலினி, காஷித்ஜெயின் உள்ளிட்டோர் மனத்திட்ட தூதுவர்களாகவும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் மூலம் கல்லூரியின் இதர ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், பணி யாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், 63797-93630 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளையும் பெறலாம்.

இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News